பாவூர்சத்திரத்தில் சுதந்திர தினத்தையொட்டி 79 நிமிடம் இடைவிடாது ஸ்கேட்டிங் செய்து மாணவர்கள் சாதனை - MAKKAL NERAM

Breaking

Saturday, August 16, 2025

பாவூர்சத்திரத்தில் சுதந்திர தினத்தையொட்டி 79 நிமிடம் இடைவிடாது ஸ்கேட்டிங் செய்து மாணவர்கள் சாதனை


பாவூர்சத்திரத்தில் 79வது சுதந்திர தினத்தையொட்டி 79 நிமிடம் இடைவிடாது ஸ்கேட்டிங் செய்து மாணவர்கள் சாதனை படைத்தனர்.


தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரத்தில் 79வது சுதந்திர தினத்தையொட்டி  வெஸ்டன் கார்ட்ஸ் அகாடமி சார்பில் 79 நிமிடம் இடைவிடாது ஸ்கேட்டிங் செய்யும் சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது. கீழப்பாவூர் யூனியன் சேர்மன் சீ.காவேரி சீனித்துரை தலைமை வகித்து, கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் தொழிலதிபர் வைரசாமி, மருத்துவர் ராஜசேகர், அரசு போக்குவரத்து கழக கிளை மேலாளர் பொன்ராஜ், முன்னாள் ராணுவ வீரர் கிருஷ்ணன் முன்னிலை வகி;த்தனர். பயிற்சியாளர் கணேஷ் வரவேற்றார்.


30க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு கையில் தேசிய கொடி ஏந்தி 79 நிமிடம் தொடர்ந்து ஸ்கேட்டிங் செய்து சாதனை படைத்தனர். இதனை ஏராளமான பெற்றோர்கள், மாணவர்கள் கண்டு களித்து பாராட்டினர். முடிவில் பாவூர்சத்திரம் வெஸ்டர்ன் கார்ட்ஸ் இந்தியன் அகாடமி முதல்வர் கலைமதி கணேஷ் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment