டிஐஜி வருண் குமாருக்கு எதிராக சீமான் அவதூறு கருத்துக்களை தெரிவிக்க கூடாது..... சென்னை ஐகோர்ட் உத்தரவு......
திருச்சி சரக டிஐஜி வருண்குமார் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சமூக வலைதளங்களில் தன்னையும், தனது குடும்பத்தினரையும் தரக்குறைவாக விமர்சித்ததாக வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை திருச்சி குற்றவியல் நீதிமன்றம் எண் 4-ல் நடைபெற்ற போது சீமான் ஆஜராகவில்லை.
ஏப்ரல் 7-ஆம் தேதி நடைபெற்ற வழக்கு விசாரணைக்கும் சீமான் வரவில்லை. அதன் பிறகு மே 8-ம் தேதி அவர் நேரில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அன்றும் சீமான் வராததால் வழக்கு விசாரணை மே 15-ஆம் தேதிக்கு வைக்கப்பட்டது.இதனையடுத்து கடைசி வாய்ப்பு எனக் கூறி நீதிபதி விசாரணையை மே 21-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார். அன்றும் சீமான் ஆஜராகாத நிலையில் இன்று வழக்கை விசாரித்த திருச்சி மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் ஜூலை 7-ஆம் தேதி சீமான் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்.
அப்படி இல்லை என்றால் பிடிவாரண்டு பிறப்பிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.முன்னதாக தனக்கு எதிராக ஆதாரம் இல்லாத அவதூறு கருத்துக்களை தெரிவிக்க சீமானுக்கு தடை விதிக்க கோரியும் ரூபாய் 2.10 கோடி மான நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் டி ஐ ஜி வருண் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் டிஐஜி வருண் குமாருக்கு எதிராக அவதூர் கருத்துக்களை தெரிவிக்க சீமானுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
No comments