கீழையூர் வட்டாரத்தில் வணிக செயல் திட்டம் பயிற்சி நடைப்பெற்றது
நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் முன் மாதிரி வட்டார அளவிலான கூட்டமைப்பிற்கான தொலை நோக்கு பார்வை வணிக செயல் திட்டம் 2025 - 2026 க்கான மூன்று கட்டமாக பயிற்சி நடைப்பெறுகிறது. முதற்கட்டமாக 2 நாட்கள் இரண்டாம் கட்டமாக 5 நாள் மற்றும் மூன்றாம் கட்ட பயிற்சி 3 நாட்கள் நிறைவு பெறுகிறது.பின்பு வணிக செயல் திட்டம் முதற்கட்ட பயிற்சி கிராம இ - சேவை கட்டிடத்தில் கீழையூர் அலுவலகத்தில் 31.07.2025 முதல் 01.08.2025 வரை 2 நாட்கள் நடைப்பெற்றது.
இதில் திட்ட இயக்குனர் மற்றும் இணை இயக்குனர் வழிகாட்டுதலின்படி உதவி திட்ட அலுவலர் ராஜ்குமார் அறிவுரையின்படி பயிற்சி நடைபெற்றது. மகளிர் திட்ட வட்டார இயக்க மேலாளர் பொறுப்பு இளஞ்செழியன் தலைமையில் வட்டார ஒருங்கிணைப்பாளர் அங்கையர்கனி வரவேற்று பேசினார் மகளிர் திட்ட மாவட்ட வள பயிற்றுநர் (பயிற்சிகள்) ஸ்ரீரங்கபாணி வணிக செயல் திட்டம் பயிற்சி அளித்தார் இதில் சுயஉதவிக் குழு, ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு மற்றும் வட்டார அளவிலான கூட்டமைப்பு நிர்வாகத்தை வலுப்படுத்துதல், தொலைநோக்குப் பார்வை ஆண்டு செயல் திட்டம் மற்றும் வணிக செயல் திட்டமிடல் பயிற்சியில் வாழ்வாதார வள ஆதாரங்கள்,சமூகவள ஆதாரங்கள்,வணிக வடிவம், தொழில் வகைகள், உற்பத்தி, சேவை, வணிகம், உற்பத்தி துறை பொருள்களை உருவாக்குதல் மற்றும் மதிப்பு கூட்டல், தொழில்நுட்பம் ,அதிக நிதி தேவை மற்றும் பணியாளர் தேவை ஆகியவர்களுடன் தொடர்புடையதாகும். தொழில் நிறுவனம் முதல் வாடிக்கையாளர் வரை, சந்தாதாரர் வணிகம், உடனடி வணிகம் , வாய்ப்புகளை கண்டறிதல்,திட்ட யோசனை,செயல்முறை,தேர்வு,மதிப்பீடு,சந்தைப்படுத்துதல்,டிஜிட்டல் மார்க்கெட்டிங்,பிரண்ட்,போன்றவை பயிற்சி வழங்கப்பட்டது.
பின்பு வட்டார அளவிலான கூட்டமைப்பு நிறுவனத்தை செயல்படுத்த வேண்டும் கீழையூர் வட்டாரத்தில் இணைந்துள்ள உறுப்பினர்கள் வட்டாரத்தை தங்களுடைய சொந்த நிறுவனமாக நினைத்து தங்களுக்குள் கொள்கைகள் மற்றும் சட்டதிட்டங்கள் வகுத்து தாங்களே நிர்வாகம் செய்து தன்னிறைவை அடைதல் சிறந்த கீழையூர் முன்மாதிரியான வட்டாரமாக மாற்றுவதே எங்களின் நோக்கமாகும். என உறுதி அளித்தனர். சமுதாய மகளிர் சுய உதவி குழு பயிற்றுநர் எட்டுகுடி மீரா நன்றியுரை கூறினார்.
நாகை மாவட்ட நிருபர் ஜீ.சக்கரவர்த்தி
No comments