• Breaking News

    தமிழகம் வருகிறார் குடியரசு துணைத்தலைவர் வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன்

     


    துணை ஜனாதிபதி தேர்தல் அடுத்த மாதம் (செப்டம்பர்) 9-ந்தேதி நடைபெறுகிறது. இதில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தமிழ்நாட்டை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணனும், காங்கிரஸ் தலைமையிலான ‘இந்தியா' கூட்டணி சார்பில் முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டியும் போட்டியிடுகின்றனர்.


    2 பேரும் வேட்புமனுவை தாக்கல் செய்துவிட்டனர். இதையடுத்து அவர்கள் ஒவ்வொரு மாநிலமாக சென்று தங்களது கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து எம்.பி.க்களின் ஆதரவை பெறும் முயற்சியில் இறங்கி உள்ளனர்.


    இந்த நிலையில் , கூட்டணி கட்சித் தலைவர்களின் ஆதரவைப் பெற இந்த வாரம் சி.பி.ராதாகிருஷ்ணன் தமிழ்நாட்டிற்கு வருகிறார். அவர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டுகிறார்.


    முன்னதாக ‘இந்தியா' கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி அவர் இன்றுசென்னை வருகிறார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பின் போது, துணை ஜனாதிபதி தேர்தலில் தி.மு.க. எம்.பி.க்கள் தனக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று சுதர்சன் ரெட்டி வேண்டுகோள் விடுக்க உள்ளார்.

    No comments