இடைகால் ஸ்டஅக் ஹைடெக் பள்ளியில் சகோதயா பள்ளிகளுக்கு இடையிலான கோ கோ போட்டிகள்..... பதக்கம், சான்றிதழ்கள் வழங்கப்பட்டது......
இடைகால் ஸ்டஅக் ஹைடெக் பள்ளியில் நடைபெற்ற மதுரை சகோதயா பள்ளிகளுக்கு இடையிலான கோ கோ போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளிகளுக்கு பதக்கம், சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
மதுரை சகோதயா பள்ளிகளுக்கான கோ கோ போட்டிகள் இடைகால் ஸ்டஅக் ஹை டெக் பள்ளியில் 2 நாட்கள் நடைபெற்றது. இதில் 12, 14,17,19 வயதிற்குட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் என சுமார் 60 அணிகள் கலந்து கொண்டன. போட்டியினை பள்ளி தலைவர் முருகன், தாளாளர் புனிதா செல்வி, செயலாளர் ஆகாஷ் மற்றும் ஆஷிஷ் லிங் ஆகியோர் தொடங்கி வைத்தனர். பள்ளி முதல்வர் பிரவின்குமார் வாழ்ததி பேசினார்.
இப்போட்டிகளில் ஆண்கள் பிரிவில் 12 வயது பிரிவில் கண்ணா இண்டர்நேஷனல் பள்ள, புனித அசிசி பப்ளிக் பள்ளியும், 14 வயது பிரிவில் ஸ்ட அக் ஹை டெக் பள்ளி, பொடியனூர் சிவசக்தி வித்யாலயா பள்ளியும், 17 வயது பிரிவில்ஸ்ட அக் ஹை - டெக் பள்ளி, விவேகானந்தா குளோபல் பள்ளியும், 19 வயது பிரிவு கண்ணா இண்டர்நேஷனல் பள்ளி, புனித அசிசி பப்ளிக் பள்ளியும், முறையே முதல் இரண்டு இடங்களைப் பிடித்தன. பெண்கள் பிரிவில் 12 வயது பிரிவில் கண்ணா இண்டர்நேஷனல் பள்ளி, ஸ்ட அக் ஹை - டெக் பள்ளியும், 14வயது பிரிவில் விவேகானந்தா வித்யாலயா, சிவசக்தி வித்யாலயா பள்ளியும், 17 வயது பிரிவில் கண்ணா இண்டர்நேஷனல் பள்ளி, வேல்ஸ் பப்ளிக் பள்ளியும், 19 வயது பிரிவில் கேம்பிரிட்ஜ் இண்டர்நேஷனல் பள்ளி, வேதிக் வித்யாஷ்ரம் பள்ளியும் முதல், இரண்டாம் இடங்களைப் பிடித்தன.
வெற்றி பெற்ற அணிகளுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை பள்ளி தலைவர் முருகன், தாளாளர் புனிதா செல்வி, செயலாளர்கள் ஆகாஷ், ஆஷிஷ் லிங் மற்றும் பள்ளி முதல்வர் பிரவின் குமார் ஆகியோர் வழங்கி பாராட்டினர். போட்டிக்கான ஏற்பாடுகளை பள்ளி உடற்கல்வித்துறை மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
No comments