வாக்காளர்கள் நீக்கத்திற்கான காரணத்தை கூற முடியாது..... தேர்தல் ஆணையம் அதிரடி - MAKKAL NERAM

Breaking

Sunday, August 10, 2025

வாக்காளர்கள் நீக்கத்திற்கான காரணத்தை கூற முடியாது..... தேர்தல் ஆணையம் அதிரடி

 


பிஹாரில் கடந்த காலத்தில் 65 லட்சம் வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, அந்த விவரங்களை வழங்க முடியாது என்று இந்திய தேர்தல் ஆணையம் (ECI) உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.


ஜனநாயக சீர்த்திருத்த அமைப்பு தொடர்ந்த வழக்கில், தேர்தல் ஆணையம் தனது பதிலில், நீக்கப்பட்ட வாக்காளர்களின் விவரங்களை வெளியிடுவது கட்டாயம் அல்ல என்றும், அந்த வாக்காளர்களை நீக்கியதற்கான காரணங்களை தனிப்பட்ட முறையில் தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் தெளிவுபடுத்தியுள்ளது. மேலும், வாக்காளர் பட்டியல் பராமரிப்பு, புதுப்பிப்பு, மற்றும் திருத்த பணிகள் தேர்தல் சட்ட விதிகளின்படி நடப்பதாகவும், அவற்றில் தேவையான தகவல்களை மட்டுமே பொதுமக்களுக்கு பகிர்வது வழக்கமான நடைமுறை என்றும் ஆணையம் தெரிவித்துள்ளது.


பிஹாரில் மிகப்பெரிய அளவில் வாக்காளர்கள் நீக்கப்பட்டிருப்பது, தேர்தல் செயல்முறையின் வெளிப்படைத்தன்மை குறித்த கேள்விகளை எழுப்பி, அரசியல் வட்டாரத்திலும், சமூக அமைப்புகளிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment