திருவண்ணாமலை கோவிலில் இசையமைப்பாளர் இளையராஜா சாமி தரிசனம் - MAKKAL NERAM

Breaking

Tuesday, August 19, 2025

திருவண்ணாமலை கோவிலில் இசையமைப்பாளர் இளையராஜா சாமி தரிசனம்

 


1976 ம் ஆண்டு தேவராஜ்-மோகன் இயக்கத்தில் வெளியான 'அன்னக்கிளி' படத்தின் மூலம் அறிமுகமானவர் இசைஞானி இளையராஜா. தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான இளையராஜா, சினிமாவில் 1,500 படங்களுக்கு மேல் இசையமைத்து சாதனை ராஜாவாக திகழ்ந்து வருகிறார்.


இந்நிலையில், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு இன்று காலை இசைஞானி இளையராஜா வருகை தந்தார். இதையடுத்து விநாயகர், அண்ணாமலையார், மூலவர் உள்ளிட்ட சன்னதிகளை தரிசனம் செய்தார். இதைத் தொடர்ந்து இசைஞானி இளையராஜாவிற்கு திருக்கோவில் நிர்வாகம் சார்பாக மலை அணிவித்து சாமி பிரசாதம் வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment