நாகூர் சித்திக் சேவைக் குழுமம் தர்ம அறக்கட்டளை ஆலோசனைக்குழு கூட்டம் வேளாங்கண்ணி சமூக ஆர்வலர் அ, ஆரோக்கியசாமி தலைமையில் நாகப்பட்டினம் நீதிமன்ற வளாகம்,நாகை மாவட்ட ஓய்வுபெற்ற அலுவலர் சங்கத்தில் நடைபெற்றது.
நிறுவனத்தலைவர் நாகூர் சித்திக், செயலாளர் மஹமது மரைக்காயர், டிரஸ்டியும், இந்திய வர்த்தக தொழிற்குழுமம் துணைத்தலைவருமான பாலா@ பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். ஆலோசகர்கள் நாகை மோகன், சேகர்,நிர்வாகிகள் ந, ராமசாமி, கவிஞர்,தோழர்,ஆ,மீ, ஜவஹர் , நா, பாலமுரளி, திருமதி, ஷீலா, ,சகாயராஜ், சண்முகநாதன், மனோகரன், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
நாகப்பட்டினம் மாவட்ட 4ஆவது புத்தக திருவிழாவில் தன்னார்வலராக சிறப்பாக பணியாற்றி நாகை மாவட்ட ஆட்சித் தலைவர் ப, ஆகாஷ், பொற்கரங்களால் பாராட்டு சான்று, கேடயம் பெற்ற அறக்கட்டளையைச் சார்ந்த அனைவருக்கும் வாழ்த்துக்களையும், மாவட்ட ஆட்சியருக்கு நன்றி தெரிவித்தும், அறக்கட்டளைக்கு புதிய உறுப்பினர்கள் சேர்ப்பது எனவும், மழைக்கால சேவைகள் செய்வது எனவும், சாலையோரங்களில் உறங்குபவர்களுக்கு, போர்வைகள் வழங்குவது போன்ற தீர்மாணங்கள் நிறைவேற்றப்பட்டது. அறக்கட்டளையின் இணை செயலாளர் அப்துல் பாசித் நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவு பெற்றது.
நாகை நிருபர்: ஜீ.சக்கரவர்த்தி
விளம்பர தொடர்புக்கு
9788341834.
No comments:
Post a Comment