கெம்பநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் சுதந்திர தின விழாவில் பேரூராட்சி தலைவர் கே.ரவிசந்திரன் தேசிய கொடியேற்றி இனிப்புகள் வழங்கினார் - MAKKAL NERAM

Breaking

Friday, August 15, 2025

கெம்பநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் சுதந்திர தின விழாவில் பேரூராட்சி தலைவர் கே.ரவிசந்திரன் தேசிய கொடியேற்றி இனிப்புகள் வழங்கினார்



ஈரோடு மாவட்டம் ,  சத்தியமங்கலம் ஒன்றியம் ,  கெம்பநாயக்கன்பாளையம் பேரூராட்சி  பா சுந்தரம் செட்டியார் அரசு மேல்நிலைப் பள்ளியில் 79 வது  சுதந்திர தின விழாவை முன்னிட்டு கெம்பநாயக்கன்பாளையம் பேரூர் செயலாளரும் , கெம்பநாயக்கன்பாளையம் பேரூராட்சி தலைவர் கே.ரவிசந்திரன் தேசிய கொடி ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கி சிறப்புரையாற்றினார்.

 உடன் பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் கே .எம். ராஜசேகரகாசிபதி ,  தலைமை ஆசிரியர்   இளங்கோ ,  இருபால் ஆசிரியர்கள் , பள்ளி பொருளாளர்  தேவன் ,  பள்ளி துணை தலைவர்  ஆ.ரஜினிதம்பி  மற்றும் பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் ,  பொதுமக்கள்,  பள்ளி மாணவ , மாணவிகள் கலந்து கொண்டனர். விழாவில் பள்ளியில் ஆற்றல் மிக்க மாணவ ,  மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார். கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி - 9965162471 , 6382211592 .




No comments:

Post a Comment