ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கல்லூரிக் கலை அரங்கில் இளநிலை பட்டப் பாடப்பிரிவு மாணவ , மாணவிகளுக்கான நான்காம் பட்டமளிப்பு விழா கல்லூரி முதல்வர் முனைவர் நா.சிவக்குமார் தலைமையில் நடைபெற்றது. நான்காம் பட்டமளிப்பு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் டி.வேணுகோபால் கலந்து கொண்டு பட்டங்களை வழங்கி சிறப்புரை ஆற்றினார்.
பட்டங்களைப் பெறத்தகுதி உள்ள 245 மாணவ , மாணவிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பட்டங்களைப் பெற்றுக் கொண்டனர். நிகழ்ச்சியின் தொடக்கமாக கல்லூரி முதல்வர் முனைவர் நா.சிவக்குமார் பட்டமளிப்பு விழா அறிக்கை படித்து அனைவரையும் வரவேற்று தலைமை உரையாற்றினார்.
இவ்விழாவில் வணிகவியல், பொருளியல், ஆங்கிலம், கணிதவியல், கணினி அறிவியல், கணினி பயன்பாட்டியல், வணிக நிர்வாகவியல், காட்சித் தொடர்பியல், வேதியியல் மற்றும் இயற்பியல் ஆகிய துறைகளைச் சேர்ந்த துறைத் தலைவர்கள் தங்களுடைய துறையின் பட்டம் பெற்ற மாணவ , மாணவிகள் பெயர் பட்டியலை படிக்க மாணவ, மாணவிகள் வரிசையில் நின்று பட்டங்களைப் பெற்றுக்கொண்டனர்.
மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி -9965162471 , 6382211592 .
No comments:
Post a Comment