நாகலாந்து ஆளுநராக பணியாற்றிய இல. கணேசன் சமீபத்தில் மரணமடைந்த நிலையில், அப்பதவி காலியாகியுள்ளது. அதேசமயம், மகாராஷ்டிரா ஆளுநரான சிபி. ராதாகிருஷ்ணன், என்.டி.ஏ சார்பில் துணை குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதனால் அவர் விரைவில் ஆளுநர் பதவியில் இருந்து விலக இருக்கிறார். இதன் காரணமாக இரண்டு மாநிலங்களில் ஆளுநர் பதவி காலியாகும் சூழ்நிலை உருவாகியுள்ளது.இந்த நிலையில், பாஜக தேசியத் தலைமையகம், காலியாக உள்ள ஆளுநர் பதவிகளில் ஒன்றிற்கு தமிழ்நாடு பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜாவை நியமிக்கும் வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாடாளுமன்ற கூட்டத் தொடருக்குப் பின் இந்த அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுவதால், ஹெச். ராஜா ஆளுநராகும் வாய்ப்பு குறித்த அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு கிளம்பியுள்ளது.
No comments:
Post a Comment