சென்னை பசுமைவழிசாலையில் உள்ள அமைச்சர் ஐ.பெரியசாமியின் இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் திருவல்லிகேணியில் உள்ள எம்.எல்.ஏ. விடுதியிலும் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி சென்னை, மதுரை, திண்டுக்கல் உள்பட அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு சொந்தமான இடங்களில், சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பாக அமலாக்கத்துறை அதிகார்கள் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
முன்னதாக சென்னை பசுமைவழிசாலையில் உள்ள அமைச்சர் ஐ.பெரியசாமியின் இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்ற நிலையில், காவலர்கள் அங்கு சோதனை செய்ய அனுமதி மறுப்பு தெரிவித்ததால் அங்கு பரபரப்பு நிலவியது.
No comments:
Post a Comment