திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க நவம்பர் மாதத்துக்கான தரிசன டோக்கன்கள் மற்றும் தங்குமிடத்துக்கான ஆன்லைன் ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் 18-ந்தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும். பக்தர்கள் 20-ந்தேதி காலை 10 மணி வரை மின்னணு டிப்பில் பதிவு செய்யலாம்.
லக்கி டிப் மூலம் தரிசன டிக்கெட்டுகள் ஒதுக்கப்பட்டவர்கள் 20-ந்தேதியில் இருந்து 22-ந்தேதி வரை மதியம் 12 மணிக்குள் கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.21-ந்தேதி காலை 10 மணிக்கு, கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை, அர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ர தீபலங்கார சேவை ஆகிய ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் மாலை 3 மணிக்கு வெளியிடப்படும்.
அங்கப்பிரதட்சண டோக்கன்கள் 23-ந்தேதி காலை 10 மணிக்கும், ஸ்ரீவாணி அறக்கட்டளை டிக்கெட்டுகள் காலை 11 மணிக்கும், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான டிக்கெட்டுகள் மாலை 3 மணிக்கும் வெளியிடப்படும்.ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள் 25-ந்தேதி காலை 10 மணிக்கும், திருமலை மற்றும் திருப்பதிக்கான தங்குமிட ஒதுக்கீடு மாலை 3 மணிக்கும் வெளியிடப்படும்.பக்தர்களுக்கான இதர தரிசன டிக்கெட்டுகள் மற்றும் ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளை திருப்பதி தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ வலைதளம் மூலம் மட்டுமே முன்பதிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment