நாகப்பட்டினம் மாவட்டம் வடக்கு பொய்கை நல்லூர் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு சுதந்திரம் அடைந்து 79 ஆண்டுகள் ஆகியும் அடிப்படை வசதிகள் வேண்டி பெரியார் அம்பேத்கர் மக்கள் இயக்கம் சார்பில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வீட்டு மனை பட்டா மற்றும் அடிப்படை வசதிகள் வேண்டி மாவட்ட தலைவர் வெற்றி தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்தில் உழவர் தெரு, சுனாமி தெரு, மர்றும் சிவன் கோயில் தெருவிற்கு வீட்டு மனை பட்டா, பகுதி நேர அங்காடி, சிமெண்ட் சாலை, குடிநீர் வசதி, விளையாட்டு திடல், நூலகம், மற்றும் பட்டியலின மக்களின் விளை நிலங்களை மீட்டெடுக்க வேண்டியும் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உண்ணா விரத போராட்டத்தில் ஈடுப்பட்டு கோஷங்கள் இட்டனர். நாகை வட்டாச்சியர் நீலாயத் தாட்சி மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
செய்தியாளர்: ஜி.சக்கரவர்த்தி
No comments:
Post a Comment