புதுக்கோட்டை மாவட்டத்தில் புகழ் பெற்ற விராலிமலை முருகன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலை சுற்றி ஏராளமான ஆக்கிரமிப்புகள் உள்ளன. இவற்றை அகற்ற வேண்டும் என்று அந்த பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சண்முகம் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வந்தார். இவர் மாற்றுத்திறனாளி.
கடந்த ஆண்டு செல்போன் கோபுரத்தின் மீது ஏறி போராட்டம் நடத்தினர். அப்போது சம்பவ இடத்துக்கு வந்த அரசு அதிகாரிகள் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்று உறுதியளித்ததால் ஆறுமுகம் போராட்டத்தை கைவிட்டார். ஆனால் இதுவரை ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை எனக் கூறி இன்று (ஆகஸ்ட் 15) விராலிமலையில் உள்ள முருகன் கோயிலின் கோபுரத்தின் மீது தேசியக்கொடியுடன் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டார்.
அப்போது புதுக்கோட்டை ஆட்சியர் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கோஷம் எழுப்பினார். இந்த தகவல் அறிந்து விராலிமலை வட்டாட்சியர் ரமேஷ், கோயில் செயல் அலுவலர் சுதா, விராலிமலை காவல் ஆய்வாளர் லதா, இலுப்பூர் தீயணைப்பு அதிகாரிகள் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்தனர்.
அப்போது ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்று கூறி ஆறுமுகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தினர். எனினும் அவர் கீழே இறங்காததால் தீயணைப்புத் துறையினர் ஆறுமுகத்தை மீட்க கோயில் கோபுரம் மீது ஏறினர். அப்போது ஆறுமுகம் தானே வருவதாக கூறி, கோபுரத்தின் மீது இருந்த சிலைகளைப் பிடித்துகொண்டு கீழே இறங்கினார்.
அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உயிரிழந்தார். இந்த சம்பவம் அங்கு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி கோபுரம் மீது ஏறி போராட்டம் நடத்தியது விபரீதத்தில் முடிந்துள்ளது. இனி இதுபோன்று கோபுரம், டவர் உள்ளிட்டவற்றின் மீது ஏறி ஆபத்தான முறையில் போராட்டம் நடத்த வேண்டாம் என புதுக்கோட்டை போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
No comments:
Post a Comment