• Breaking News

    அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

     


    சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முன்னாள் தமிழக முதல்-அமைச்சர் மற்றும் சட்டசபை எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டு உள்ளது.


    எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் வைத்த வெடிகுண்டு விரைவில் வெடிக்கும் என மிரட்டல் விடப்பட்டு இருந்தது. இதனால், மோப்ப நாய் உதவியுடன் போலீசார் சோதனை செய்து வருகின்றனர்.


    இதேபோன்று, கோவையில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டது. பாஸ்போர்ட் அலுவலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டு உள்ளது என்றும் அது விரைவில் வெடிக்கும் என்றும் அதில் மிரட்டல் விடப்பட்டு இருந்தது.


    இதுபற்றி தகவல் அறிந்து, வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார், மோப்ப நாயுடன் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். பண்டிகை நாளான இன்று ஒரே நாளில் அடுத்தடுத்து இதுபோன்று விடப்பட்ட வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

    No comments