• Breaking News

    சிவகங்கையில் பாஜக நிர்வாகி அடித்து கொலை

     


    சிவகங்கை நகர பாஜக வர்த்தக பிரிவு தலைவராக பதவி வகித்துவரும் சதீஷ், காவலர் குடியிருப்பு அருகே வாகன பழுது நீக்கும் கடையை நடத்தி வந்துள்ளார்.


    இந்நிலையில், நேற்று (ஆகஸ்ட் 28) அவர் மீது மர்ம நபர்கள் திடீரென தாக்குதல் நடத்தினர். பலத்த காயங்களால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கொலைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


    இச்சம்பவம் தொடர்பாக சிவகங்கை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, சம்பந்தப்பட்ட 5க்கும் மேற்பட்ட நபர்களை கைது செய்துள்ளனர். அவர்களிடம் தற்போது தீவிரமாக விசாரணை நடைபெற்று வருகிறது. பாஜக நிர்வாகியின் கொலை காரணம் குறித்தும், சம்பவத்தில் மேலும் யார் யார் தொடர்புடையவர்கள் என்பதையும் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம், சிவகங்கை மாவட்டம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    No comments