இந்தியா – சீனா இடையே நிறுத்தப்பட்டிருந்த நேரடி விமான சேவை, மீண்டும் தொடங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் நடைபெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தையின்போது இந்த முடிவு எடுக்கப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்று, எல்லை பிரச்னை உள்ளிட்ட காரணங்களால் இந்த விமான சேவை நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது இரு நாடுகளும் மீண்டும் பொதுவான ஒத்துழைப்பை வலுப்படுத்த தீர்மானித்துள்ளன. மேலும், பத்திரிகையாளர்கள் தங்களது செய்தி சேகரிப்பு பணிக்காக இரு நாடுகளிலும் தங்க அனுமதி பெறும் வகையில் பரஸ்பர ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment