கீழ்வளூரில் ஜெனிவா ஒப்பந்த நாள்விழா நடைபெற்றது - MAKKAL NERAM

Breaking

Wednesday, August 13, 2025

கீழ்வளூரில் ஜெனிவா ஒப்பந்த நாள்விழா நடைபெற்றது

 


 இந்தியன் ரெட்கிராஸ்  சொசைட்டி நாகப்பட்டினம் மாவட்ட துனை கிளை கீழ்வேளூர் சார்பாக ஜெனிவா ஒப்பந்த நாள் விழா(உலக சமாதான நாள்)   கீழ்வேளூர்  ரோட்டரி அலுவலகத்தில் நடைபெற்றது.

 இவ்விழாவிற்கு ரெட்கிராஸ் கீழ்வேளூர் கிளை சேர்மன் வழக்கறிஞர் வி. எஸ்.இளமாறன் தலைமை தாங்கினார்.பொருளாளர், மு.பக்கிரி சாமி முன்னிலை வகித்தார்.ஜே. ஆர். சி ஒன்றிய ஒருங்கிணைப்பாளர், சு. பாலாஜி அனைவரையும் வரவேற்றார்.

கீழ்வேளூர் கிளை கௌரவச்செயலாளர் தங்க.மோகன், போரில் ஈடுபடும் நாடுகள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் பற்றியும் அதில் குறிப்பிடப்பட்டுள்ள ஷரத்துக்கள் பற்றியும் எடுத்துரைத்தார்.

 சிறப்பு விருந்தினராக பங்கேற்ற வட்டாரக் கல்வி அலுவலர் வி.சுப்ரமணியன்  ரெட்கிராஸ் தந்தை ஜீன்ஹென்ரி டூனாட்  படத்தை திறந்து வைத்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி, பாராட்டிப்பேசினார்.விழாவில், ரோட்டரி பொறுப்பாளர்கள் ந.பழனிவேல் ந.ஜனார்த்தனம் ஆர்.மணிமாறன், ந.பக்கிரிசாமி ச.சந்திரசேகரன் ப.ஜெயக்குமார்,இரா. கண்ணையன், ஜூனியர் ரெட் கிராஸ் நாகை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு. எஸ். கோவிந்தசாமி ஜெனிவா விளக்க உரையாற்றினார்.ரெட் கிராஸ் மாவட்ட மேலாண்மைக்குழு உறுப்பினரும், சமூக ஆர்வலருமான வடக்குப்பொய்யூர். மணிவண்ணன், ரெட் கிராஸ் உறுப்பினர்கள் சொ.மணிமாறன், ஆர்.மனோகரன், டாக்டர்.ராஜு,ப. செந்தில் குமார், தனுஷ்கோடி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

ஜே.ஆர். சி பொறுப்பாளர்கள் செ. அருள் செல்வம், மு.உமா, த.உமாமகேஸ்வரி, க. அருள் முருகன், த. தமிழ்ச்செல்வன்,சு. கல்பனா, இரா. இராமநாதன், நா.சதீஷ், செ.நரேஷ்குமார் வெண்ணிலா, கே. சித்தாலட்சுமி மற்றும் தையல் பயிற்சி மகளிர் பலர் பங்கேற்றனர்.விழாவில்,ஜெனிவா ஒப்பந்த தின உறுதிமொழி ஏற்கப்பட்டது.தீ விபத்தில் பாதிக்கப்பட்ட புஷ்பவனம் சர்வோதயபுரம் கார்த்திகா குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கப்பட்டது. பத்தாம் வகுப்பில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரண வழங்கப்பட்டது.ரெட் கிராஸ் உறுப்பினர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.நிறைவில் ஜே. ஆர். சி ஒன்றிய துணை ஒருங்கிணைப்பாளர் கோ.மதன் மோகன் நன்றியுரை கூறினார்.

No comments:

Post a Comment