கீழவீராணம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக்கூட்டத்தில் ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன் கலந்து கொண்டார்.
ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம் மேல வீராணம் ஊராட்சியில் சுதந்திர தினத்தையொட்டி கிராம சபை கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் கருப்பசாமி தலைமை வகித்தார். துணைத்தலைவர் முப்பிடாதி முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலர் செய்யது அலி தீர்மானங்களை வாசித்தார். ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, திராவிட மாடல் அரசின் மக்கள் நலத்திட்டங்களை எடுத்துக்கூறி பேசினார்.
கூட்டத்தில் கிராம உதவியாளர் மாரியப்பன், துணை வேளாண்மை அலுவலர் அண்ணாத்துரை , தலைமை ஆசிரியர் ஹேமாலதா ஞானசீலா, ராஜேந்திரன், வார்டு உறுப்பினர்கள் மாரியம்மாள், முத்து லெட்சுமி, சுருதி ரத்னா, முத்துப்பாண்டி, சங்கரன், பணி தளப் பொறுப்பாளர் பிரியா, செல்வி, மற்றும் ஊராட்சி பணியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment