'கூலி' படத்துக்கு U/A சான்றிதழ் கேட்ட தயாரிப்பு நிறுவனம்...... மனுவை தள்ளுபடி செய்த சென்னை ஐகோர்ட்...... - MAKKAL NERAM

Breaking

Thursday, August 28, 2025

'கூலி' படத்துக்கு U/A சான்றிதழ் கேட்ட தயாரிப்பு நிறுவனம்...... மனுவை தள்ளுபடி செய்த சென்னை ஐகோர்ட்......

 


ரஜினிகாந்த் நடித்துள்ள ‘கூலி’ திரைப்படத்திற்கு வழங்கப்பட்ட A சான்றிதழை மாற்றி U/A சான்றிதழ் வழங்கக் கோரி தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு, இன்று நீதிமன்றத்தில் பரிசீலிக்கப்பட்டது.


முன்னதாக, கடந்த வாரம் நடைபெற்ற விசாரணையின் போது, திரைப்படத்தில் இடம்பெறும் வன்முறை காட்சிகளை நீக்கினால் மட்டுமே U/A சான்றிதழ் வழங்க சாத்தியம் என சென்சார் வாரியம் பதிலளித்தது.


இந்த நிலையில், இன்று வழக்கின் இறுதி விசாரணையில், தேவையான மாற்றங்கள் செய்யப்படாததால், ‘கூலி’ படத்திற்கு U/A சான்றிதழ் வழங்க முடியாது எனத் தெரிவித்த நீதிமன்றம், தயாரிப்பு நிறுவனத்தின் மனுவை தள்ளுபடி செய்தது. இதன் மூலம் A சான்றிதழ் நிலுவையிலேயே தொடரும் எனத் தெளிவாகியுள்ளது.

No comments:

Post a Comment