பீகார் மாநிலத்தின் நாலந்தா மாவட்டத்தில் ஹில்சா சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற பரபரப்பான சம்பவம், அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மாநில ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஷ்ரவன் குமார் மற்றும் ஹில்சா தொகுதி எம்.எல்.ஏ. கிருஷ்ணா முராரி பிரேம் முகியா ஆகியோர், சமீபத்தில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்த 9 பேரின் குடும்பத்தை நேரில் சந்திக்கச் சென்றபோது, கோபமடைந்த கிராம மக்கள்தீரென தாக்குதல் நடத்தியுள்ளனர்.
வீடியோ பார்க்க கிளிக் செய்யவும்
இந்த தாக்குதலில் ஒரு போலீஸ்காரர் உள்ளிட்ட பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்புப் பணியாளர்களின் தடை முயற்சிகளும் தோல்வியடைந்த நிலையில், அமைச்சர் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் ஓடி தன்னை பாதுகாத்துக் கொண்டார்.மாலவன் கிராமத்தில் நிகழ்ந்த இந்த சம்பவம் வீடியோவாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. நிகழ்ச்சி முடிந்ததும் காத்திருந்த கிராம மக்கள் திடீரென அமைச்சரை மத்தியில் விரட்டி தாக்கியுள்ளனர். பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் அமைச்சரின் ஆதரவாளர்களும் தாக்குதலுக்கு உள்ளாகினர்.அப்பகுதியில் தற்காலிக பதற்றம் நிலவ, பரமபரப்பான சூழ்நிலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தற்போது போலீசார் வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில் தாக்குதல் நடத்தியவர்களை அடையாளம் கண்டறிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அமைச்சரின் பயண திட்டம் வழக்கம்போல நடந்திருப்பினும், மக்கள் மனதில் பீதி மற்றும் கோபம் நீங்காதது இச்சம்பவத்தின் முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.
No comments:
Post a Comment