அழகிகளுடன் உல்லாசம் என வரவழைத்து கல்லூரி மாணவரிடம் பணம் பறித்த ரவுடிகள் கைது - MAKKAL NERAM

Breaking

Thursday, August 28, 2025

அழகிகளுடன் உல்லாசம் என வரவழைத்து கல்லூரி மாணவரிடம் பணம் பறித்த ரவுடிகள் கைது

 


சென்னை மயிலாப்பூர் டி.எஸ்.வி. கோவில் தெருவை சேர்ந்த கல்லூரி மாணவர் அடையாறில் உள்ள இசை கல்லூரியில் படித்து வருகிறார்.இந்நிலையில் செயலி மூலமாக நள்ளிரவில் மாணவர் அழகிகளை தேடியுள்ளார். அப்போது அந்த செயலியில் இரண்டு வாலிபர்கள் பேசியுள்ளனர்.


அவர்கள் மயிலாப்பூர் மாடவீதிக்கு வந்தால் அழகிகளோடு உல்லாசமாக இருக்கலாம் என்று கூறியுள்ளனர்.இதை நம்பி மாணவர் நள்ளிரவு நேரத்தில் அங்கு சென்றுள்ளார். அப்போது அருகிலுள்ள பாழடைந்த கட்டிடத்தில்தான் அழகிகள் உள்ளனர், அங்கு செல்லலாம் என்று கூறி மாணவரை அழைத்துச் சென்ற இருவரும் அவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.1380 பணத்தை பறித்தனர்.


இது பற்றி மயிலாப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.இதில் மாணவரிடம் கைவரிசை காட்டியது மயிலையின் மாங்கொல்லையை சேர்ந்த ரவுடிகள் சூர்யா, அஜய் என்பது தெரியவந்தது. இருவர் மீதும் பி.என்.எஸ். சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் 126(2) சட்டவிரோதமாக தடுத்தல், 115(2) காயம் விளைவித்தல், 309(3) மிரட்டி பணம் பறித்தல், 351(2) மிரட்டல், 66(டி) தகவல் தொழில்நுட்பச் சட்டம் ஆகிய 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்த போலீசார் சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

No comments:

Post a Comment