பொன்னேரி ஸ்ரீ கிருஷ்ணா ஜூவல்லர்ஸ் கடையில் 20க்கும் மேற்பட்ட வருமான வரி அதிகாரிகள் திடீர் சோதனை


திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் உள்ள தனியாருக்கு சொந்தமான கிருஷ்ணா ஜூவல்லர்ஸ்  நகைக்கடை உள்ளது.இங்கு வழக்கமாக வெள்ளிக்கிழமைகளில் நகை கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில்   5 வாகனங்களில் ஆய்வாளர் சிவக்குமார் தலைமையில் வந்த சுமார் 20க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் குழுவினர் நகைக்கடை மற்றும் அவரது   வீட்டில் சோதனை நடத்தி வருகின்றனர். 

வரி ஏய்ப்பு தொடர்பான புகாரில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. கிருஷ்ணா நகைக் கடையில் நடைபெற்றுள்ள விற்பனை விவரங்கள், மார்க்கெட்டில் வாங்கிய தங்க நகைகளின் விவரம், விற்பனை செய்யப்பட்டுள்ள நகைகளின் விவரங்கள், தற்போது கடையில் உள்ள இருப்பு தங்கம், வைரம், பிளாட்டினம், வெள்ளி உள்ளிட்ட நகைகள் மதிப்பு, கடந்த நிதியாண்டில் வருமானவரி செலுத்தியதற்கான ஆவணங்கள் உள்ளிட்டவற்றை வருமான வரித்துறை அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். 

நகைக்கடையை மூடிவிட்டு அதன் ஊழியர்களிடம் அதிகாரிகள் குழுவினர் சோதனை நடத்தி வருகின்றனர்.   விவரங்கள்  . நகைக் கடை மற்றும் அதன் உரிமையாளர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Post a Comment

0 Comments