தென்காசி: 310வது பிறந்த தினத்தையொட்டி பூலித்தேவர் சிலைக்கு திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை - MAKKAL NERAM

Breaking

Tuesday, September 2, 2025

தென்காசி: 310வது பிறந்த தினத்தையொட்டி பூலித்தேவர் சிலைக்கு திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை


310வது பிறந்த தினத்தையொட்டி நெல்கட்டும்செவலில் பூலித்தேவர் சிலைக்கு திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


சுதந்திர போராட்ட வீரர் மாமன்னர் பூலித்தேவரின் 310வது பிறந்த தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி நெல்கட்டும்செவலில் உள்ள பூலித்தேவரின் நினைவு மாளிகையில் அமைந்துள்ள பூலித்தேவரின் முழு உருவச்சிலைக்கு ஆலங்குளம் யூனியன் சேர்மனும், தென்காசி தெற்கு மாவட்ட திமுக மகளிர் தொண்டரணி அமைப்பாளருமான திவ்யா மணிகண்டன், மாவட்ட கவுன்சிலரும், மாவட்ட துணை செயலாளருமான கனிமொழி ஆகியோர்  மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


இந்நிகழ்ச்சியில் வாசுதேவநல்லூர் யூனியன் சேர்மன் பொன்முத்தையாபாண்டியன், மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் மணிகண்டன், கிளை செயலாளர் வீராணம் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment