விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் (EPS) கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. கூட்டத்தின் நடுவே, திமுக நிர்வாகிக்கு சொந்தமான ஒரு கார் அங்கு வந்தது. உடனடியாக சில அதிமுக தொண்டர்கள், கூட்டத்தை கலைக்கும் நோக்கத்துடன் இது செய்யப்பட்டதாகக் கருதி, காரின் கண்ணாடியை அடித்து உடைத்தனர்.
ஆனால் பின்னர் அந்த காரில் ஒருவர் உடல்நிலை பாதிக்கப்பட்ட சிறுவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அந்த கார், திமுக சேர்மனின் சகோதரருக்கு சொந்தமானது என்பதும் தெரிய வந்தது.
இந்த சம்பவம் EPS கூட்டத்தில் சிறிது நேரம் குழப்பத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து போலீசார் விரைந்து வந்து சூழ்நிலையை கட்டுப்படுத்தினர். குறிப்பிடத்தக்க வகையில், இதற்கு முன்பும் துறையூரில் நடந்த EPS கூட்டத்தில், ஒரு ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக புகார் எழுந்திருந்தது.தொடர்ந்து இந்த மாதிரியான சம்பவங்கள் நடைபெறுவதால், அதிமுக கூட்டங்களில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை உருவாகும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வெகுவாகப் பரவி, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
No comments:
Post a Comment