தென்காசி: மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 329 மனுக்கள் பெறப்பட்டன - MAKKAL NERAM

Breaking

Tuesday, September 2, 2025

தென்காசி: மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 329 மனுக்கள் பெறப்பட்டன


தென்காசியில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 329 மனுக்கள் பெறப்பட்டன.

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல்கிஷோர் தலைமை வகித்து, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரக்கோருதல், பட்டா மாறுதல், மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 329 மனுக்கள் பெறப்பட்டது.


தொடர்ந்து 2025-2026 ஆம் நிதி ஆண்டு வாழ்வாதார மேம்பாடு பண்ணைசார் திட்டத்தின்கீழ், கடையநல்லூர் வட்டாரம் சொக்கம்பட்டி ஊராட்சியில் அமைக்கப்பட்டுள்ள காடை வளர்ப்பு தொகுப்பு பயனாளிகளுக்கு காடைகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன், சார் ஆட்சியர் வைஷ்ணவி பால், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மரு.தண்டபாணி, மாவட்ட வழங்கல் அலுவலர் சிவக்குமார் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment