திருக்குவளை அருகே மேலவாழக்கரையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கற்பக விநாயகர் 4ஆம் ஆண்டு ஊர்வலம் நடைபெற்றது
திருக்குவளை தாலுக்கா வாழக்கரையில் அமைந்துள்ள ஆபத்துகாத்த விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு ஐம்பொன் சிலையினாலான விநாயகர் ஊர்வலம் நடைபெற்றது.
மேலும் மேலவாழக்கரை பகுதியில் 4ஆம் ஆண்டாக பிரதிஷ்டை செய்யப்பட்ட கற்பக விநாயகருக்கு தினமும் சிறப்பு வழிபாடு நடைபெற்று வந்தது. அதனைத் தொடர்ந்து விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்றது. வாழக்கரை,மேலவாழக்கரை, கீழ வாழக்கரை மெயின்ரோடு வழியாக விநாயகர் சிலை ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது.
வழிநெடுகிலும் பொதுமக்கள் அர்ச்சனை செய்து வணங்கினர். ஊர்வலத்தில் ஏராளமான சிறுவர்கள் இளைஞர்கள், குழந்தைகள் உற்சாகமாக நடனமாடியபடி பங்கேற்றனர்.ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்ட விநாயகர் சிலை ஏர்வைக்காடு வெள்ளையாற்றில் கரைக்கப்பட்டது.
கீழ்வேளூர் நிருபர் த.கண்ணன்
No comments