• Breaking News

    தென்காசி காசிவிசுவநாதசுவாமி கோவிலில் ஆவணி மூல தெப்பத்திருவிழா..... ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு



    தென்காசி அருள்மிகு காசிவிஸ்வநாதர் கோவிலில் ஆவணி மூல தெப்பத் திருவிழா நேற்று நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.


    தென்காசியில் அமைந்துள்ள காசிவிசுவநாதசுவாமி கோவிலில் ஆண்டுதோறும் ஆவணி மாதத்தில் மூலம் நட்சத்திரதன்று தெப்பத்திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு திருவிழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி, கோவிலில் இருந்து சுவாமி, அம்பாள் காலை 10.45 மணிக்கு வீதி உலா வருதலும்,மாலையில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, தீபாராதனையும் நடைபெற்றது. 6 மணிக்கு மேல் சுவாமி- அம்பாள் தெப்பத்திற்கு எழுந்தருளினர். தொடர்ந்து நீராழி மண்டபத்தை 11 முறை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.


    இதில், தென்காசி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டபக் தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை, அறங்காவலர் குழுத் தலைவர் பாலகிருஷ்ணன், கோவில் செயல்அலுவலர் பொன்னி, அறங்காவலர் குழு உறுப்பினர்கள் முருகேசன், புவிதா,ஷீலாகுமார், மூக்கன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

    No comments