• Breaking News

    கீழையூர் அருகே வணிக செயல்திட்ட 5 நாட்கள் தொலைநோக்கு பயிற்சி நடைபெற்றது



     தமிழ்நாடு மாநில ஊரக  வாழ்வாதார இயக்கம் சார்பில், நாகப்பட்டினம் மாவட்டம், கீழையூர் வட்டாரத்திற்கு உட்பட்ட 27 ஊராட்சிகளில் உள்ள கணக்காளர்கள் மற்றும் சுய உதவி குழு பயிற்றுனர்கள், வட்டார அளவிலான கூட்டமைப்பு செயற்குழு உறுப்பினர்களுக்கு  வணிக செயல்திட்டம்  குறித்த தொலைநோக்கு 5 நாட்கள் பயிற்சி  நடைபெற்றது.

     செப்டம்பர் 9ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை, 5 நாட்கள்  திருப்பூண்டியில் உள்ள வட்டார வானவில் மையத்தில்  நடைபெற்றது. இந்த பயிற்சி வகுப்பினை மாவட்ட திட்ட இயக்குனர் கோ.சித்ரா துவங்கி வைத்தார்.வணிக வளர்ச்சி தொடர்பான திட்டங்களை எவ்வாறு உருவாக்குவது, அதை எவ்வாறு செயல்படுத்துவது என்பதற்கான விழிப்புணர்வு மற்றும் பயிற்சிகளை வழங்கும் நோக்கத்துடன் இந்த பயிற்சி நடைபெற்றது.

    வட்டார இயக்க மேலாளர் எஸ். இளஞ்சேரன் தலைமையில் நடைபெறும் பயிற்சி வகுப்பில் மாவட்ட வள பயிற்றுநர் ஸ்ரீரங்கபாணி  பயிற்சி குறித்து விளக்கி பேசினார்.இந்நிகழ்வில்  வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    திருக்குவளை நிருபர் த.கண்ணன்

    No comments