சினிமாவில் இருந்து விலகி ஜோதிடராக மாறிய பிரபல நடிகை
திரையுலகில் பிரபல நடிகையாக இருந்து வரும் பலர் தங்களது நட்சத்திர அந்தஸ்தை பயன்படுத்தி ஓட்டல், ரியல் எஸ்டேட் மற்றும் பல்வேறு தொழில்களில் முதலீடு செய்து வருமானத்தை பெருக்கி வருகின்றனர். ஒரு கட்டத்தில் சினிமாவில் இருந்து விலகி முழுக்க முழுக்க தொழிலில் கவனம் செலுத்த தொடங்கி விடுகின்றனர்.
சினிமாவே வேண்டாம் போதுமடா சாமி என சிலர் சாமியாராகவும் போய்விட்டனர். அந்த வகையில் திரையுலகில் நட்சத்திர அந்தஸ்தில் இருந்தவர் நடிகை துலிப் ஜோசி. இந்தி, கன்னடம், மலையாளம், தெலுங்கு மொழி படங்களில் நடித்துள்ள துலிப் ஜோசியின் அழகு மற்றும் நடிப்புக்காக திரை உலகில் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் கூட்டம் இருந்தது. சினிமா நடிப்பில் பிசியாக இருந்தபோதே திடீரென துலிப் ஜோசி சினிமாவில் இருந்து விலகி ஜோதிட துறையில் தடம் பதித்து இப்போது பிரபல ஜோதிடராக இருந்து வருகிறார்.
இது மட்டுமின்றி தனது கணவர் வினோத் நாயருடன் சேர்ந்து பிரபல நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இந்நிறுவனத்தின் மதிப்பு ரூ.700 கோடி என சொல்லப்படுகிறது. துலிப்பிடம் ஜோதிடம் பார்ப்பவர்களின் ஜோசியம் எப்படி இருந்ததோ தெரியவில்லை. ஆனால் துலிப் ஜோசிக்கு ஜோசியம் நன்றாக கை கொடுத்து இருக்கிறது.
No comments