கட்சி நிர்வாகிகள் யாரையும் நான் அழைக்கவில்லை...... 5ம் தேதி நடக்கப்போவது உங்களுக்கே தெரியும்...... செங்கோட்டையன் பேட்டி
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. இதனிடையே கோபி குள்ளம்பாளையத்தில் உள்ள தன்னுடைய தோட்டத்து வீட்டில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது நாளை மறுநாள் அதாவது 5-ந் தேதி மனம் திறந்து பேச உள்ளதாக கூறினார்.
இந்தநிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
5-ஆம் தேதி கட்சி அலுவலகத்தில்தான் கூட்டத்தை வைத்திருக்கிறேன்..என்னுடைய கருத்தை தெரிவிக்கப்போகிறேன். அதிமுக தொண்டர்களின் கருத்தை பிரதிபலிப்பேன். கட்சி நிர்வாகிகள் யாரையும் நான் அழைக்கவில்லை. 5ம் தேதி நடக்கப்போவது உங்களுக்கே தெரியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் உடன் முன்னாள் எம்.பி. சந்த்தியபாமா சந்தித்தார். செங்கோட்டையன் நடத்தும் கூட்டத்தில் பங்கேற்பேன் என்று முன்னாள் எம்.பி. சத்தியபாமா கூறியுள்ளார்.
No comments