• Breaking News

    தனது தயாரிப்பு நிறுவனத்தை மூடுகிறேன்..... இயக்குனர் வெற்றிமாறன் அறிவிப்பு.....


     ‘கிராஸ் ரூட் பிலிம்ஸ்’ என்ற நிறுவனத்தையும் நடத்தி வரும் வெற்றிமாறன், உதயம் என்.எச்.4, பொறியாளன், கொடி, லென்ஸ், அண்ணனுக்கு ஜே உள்ளிட்ட பல்வேறு படங்களைத் தயாரித்துள்ளார். கடைசியாக ஆண்ட்ரியா ஜெர்மியா நடிப்பில் 2022-ம் ஆண்டு வெளியான 'அனல் மேலே பனித்துளி' படத்தை தயாரித்திருந்தார்.


    சமீபத்தில் அறம் பட இயக்குநர் கோபி நயினார் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடிப்பில் ‘மனுஷி’ படத்தை தயாரித்துள்ளார். இப்படத்திற்கு தணிக்கை சான்று வழங்க சென்சார் போர்டு மறுத்தது. இப்படம் மாநில அரசை மோசமாக சித்தரிப்பு உள்ளதாகவும், கம்யூனிச கொள்கையை குழப்பும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறி தணிக்கை சான்று மறுக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின்போது சென்சார் போர்டு, ‘மனுஷி’ படத்தின் ஆட்சேபகரமான காட்சிகளை நீக்கினால் தணிக்கை சான்றிதழ் வழங்க தயாராக உள்ளதாக கோர்ட்டில் பதில் அளித்துள்ளது. படத்தை மீண்டும் தணிக்கை செய்யக் கோரி வெற்றிமாறன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். விசாரணையில் சென்சார் போர்டு, ‘மனுஷி’ படத்தின் ஆட்சேபகரமான காட்சிகளை நீக்கினால் தணிக்கை சான்றிதழ் வழங்க தயாராக உள்ளதாக கோர்ட்டில் பதில் அளித்தது. கடந்த 29ம் தேதி விசாரணையில் ‘மனுஷி’ படத்தில் சில காட்சிகளை நீக்கி 2 வாரத்தில் தணிக்கை குழுவுக்கு அனுப்புமாறு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.


    இயக்குனர் வர்ஷா பரத் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘பேட் கேர்ள்’. இப்படத்தில் அஞ்சலி சிவராமன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவருடன் சாந்தி பிரியா, சரண்யா ரவிச்சந்திரன், ஹ்ரிது ஹரூன், டீஜே, சஷங்க் பொம்மிரெட்டிபல்லி மற்றும் பலர் நடித்துள்ளனர். ‘பேட் கேர்ள்’ படத்தின் டீசர் வெளியானதில் இருந்து இப்படம் பல சர்ச்சைகளை சந்தித்து வருகிறது. படத்தின் டீசரில் சிறுவர், சிறுமிகள் குறித்து ஆபாசமான காட்சிகள் அதிக அளவில் உள்ளதாகவும், இது பாலியல் குற்றம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இந்த டீசரை சமூக ஊடகங்களில் இருந்து நீக்கி, தொடர்புடைய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடுமாறு மனுவில் கோரப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம், யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் இருந்து ‘பேட் கேர்ள்’ படத்தின் டீசரை நீக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டது. படம் வருகிற 5ந் தேதி வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இதனால் படம் திட்டமிட்ட தேதியில் வெளியாகுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.


    பிரபல இயக்குனரும், தயாரிப்பாளருமான வெற்றிமாறன், இனி தனது ‘கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி’ சார்பில் படங்கள் தயாரிக்க மாட்டோம் என்று அறிவித்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற ‘பேட் கேர்ள்’ திரைப்பட விழாவில் கலந்துகொண்டு பேசியபோது, அவர் இந்தத் தகவலை வெளியிட்டார். “ஒரு இயக்குனராகப் படம் செய்வது எளிது. ஆனால், ஒரு தயாரிப்பாளராக இருப்பது மிகவும் கடினம்” என்று வெற்றிமாறன் தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார். அவர் தயாரித்த ‘மனுஷி’ மற்றும் ‘பேட் கேர்ள்’ ஆகிய திரைப்படங்கள், தணிக்கைத் துறையில்பல சிக்கல்களைச் சந்தித்தன. இந்த அனுபவம் அவருக்கு பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.


    “தயாரிப்பாளராக இருந்தபோது பல சவால்களைச் சந்தித்தேன். இனி என் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி சார்பில் படம் தயாரிக்க மாட்டோம். அந்த நிறுவனத்தை மூடுகிறோம்” என்று வெற்றிமாறன் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு தமிழ் திரையுலகில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.


    சமூகப் பிரச்சினைகளைத் தைரியமாகப் பேசும் திரைப்படங்களுக்கு, தணிக்கைத் துறையில் ஏற்படும் தடைகள் கலைஞர்களுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்துகின்றன என்பது குறித்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    No comments