கும்மிடிப்பூண்டி: சின்ன வழதிலம்பேடு கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ துலுக்காணத்தம்மன் ஆலய 12 ஆம் ஆண்டு தீ மிதி திருவிழா
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியம் சின்ன வழதிலம்பேடு கிராமத்தில் அருள்பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீ துலுக்காணத்தம்மன் ஆலயத்தில் பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்தனர்.10 நாட்கள் நடைபெற்ற உற்சவங்களில் அம்மன் நாள்தோறும் வாண வேடிக்கைகளுடன் வீதி உலா வந்து பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி அருள் பாலித்தார்.10-ஆம் நாளான 31 தேதி ஞாயிற்றுக்கிழமை அருள்மிகு ஸ்ரீ துலுக்கானத்தம்மன் அலங்கரிக்கப்பட்ட சிம்ம வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாளித்தார்.
அதனை தொடர்ந்து 160 க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர். நிகழ்ச்சியை ஏற்பாட்டை சின்ன வழதிலம்பேடு கிராம மக்கள் செய்திருந்தனர் இதில் ஓ எம் கிருஷ்ணன். காளத்தி கோவில் நிர்வாகிகள் ஆத்துப்பக்கம்கும்மிடிப்பூண்டி சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் வான வேடிக்கை நடைபெற்றது.
No comments