திருக்குவளையில் வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் காத்திருப்பு போராட்டம்


திருக்குவளை வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாலை 3 மணி முதல் 8  மணி வரை காத்திருப்பு போராட்டத்தை வியாழக்கிழமை துவங்கி வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக  மாநிலம் முழுவதும்  வியாழக்கிழமை மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை காத்திருப்பு போராட்டம் துவங்கி நடைபெற்று வருகிறது.

 அதன் ஒரு பகுதியாக திருக்குவளை வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக காத்திருப்பு போராட்டம் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்  சங்கத்தின்  மாவட்டத் துணைத் தலைவர் கி.பிரபாகரன் தலைமையில்  நடைபெற்று வருகிறது  வருவாய் துறை அலுவலர்களுக்கான மேம்படுத்தப்பட்ட ஊதியத்தை  அரசு உடனே வழங்க வேண்டும். கருணை அடிப்படையில் பணி நியமனத்தினை 25% ஆக மீண்டும் உயர்த்தி வழங்க வேண்டும். ஓய்வுதியத்தினை பழைய ஓய்வுதிய திட்டமாக மாற்றி  அரசு ஊழியர்களுக்கான நலத்தினை பாதுகாக்க வேண்டும். அரசு ஊழியர்களுடைய பணியினை பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பதும் உள்ளிட்ட ஒன்பது அம்ச கோரிக்கை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது. 

அடுத்த கட்டமாக மாநில மையத்திலிருந்து அடுத்த அறிவிப்பு வரும்வரை தொடர்ச்சியாக மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை இந்த காத்திருப்பு போராட்டம் தொடர்ச்சியாக நடைபெறும் எனவும், மக்கள் பணி பாதிக்க கூடாது என்பதற்காக காலையிலிருந்து 3 மணி வரை மக்கள் பணி அரசு பணியை பார்த்துவிட்டு 3 மணிக்கு மேல் கோரிக்கைக்காக இந்த போராட்டத்தை நடத்தி வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். 

நில அளவைத் துறை வட்ட சார் ஆய்வாளர் ஆர்.கௌரி, தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்க திருக்குவளை வட்ட கிளை தலைவர் டி. வரதராஜன்,தமிழ்நாடு  வருவாய் கிராம ஊழியர் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் எம்.முத்துகுமரன் உள்ளிட்ட வருவாய்த்துறையினர் பங்கேற்றனர்.

 திருக்குவளை நிருபர் த.கண்ணன்

Post a Comment

0 Comments