வெற்றி பெற தவறினால்..... கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை......

 


வருகிற சட்டமன்றத் தேர்தலில், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்திற்குட்பட்ட மூன்று தொகுதிகளில் திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெறத் தவறினால், அம்மாவட்டச் செயலாளரின் பதவி பறிக்கப்படும் என திமுக தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலின் அவர்கள் அண்மையில் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வேப்பனஹள்ளியில் அதிமுகவின் துணைச் செயலாளரான கே.பி. முனுசாமி எம்.எல்.ஏ.வுக்கு எதிராக, இம்முறை திமுக தோல்வியைத் தழுவக் கூடாது என்பதில் அவர் உறுதியாக உள்ளதாகவும், தேர்தலில் முழுமையான வெற்றியைப் பதிவு செய்யத் தவறும் நிர்வாகிகளின் பதவி குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் எனவும் அவர் கடுமையாக அறிவுறுத்தியுள்ளதாகக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இது, வரவிருக்கும் தேர்தலுக்கான களப்பணிகளை விரைவுபடுத்தும் நோக்கில் கட்சி நிர்வாகிகளுக்கு விடப்பட்டுள்ள நேரடி எச்சரிக்கையாகப் பார்க்கப்படுகிறது.

Post a Comment

0 Comments