திருவள்ளூர் மாவட்டம்,கும்மிடிப்பூண்டி தொகுதியை சேர்ந்த தேவகி க/பெ சந்தோஷ்,காயத்ரி த/பெ மாதவன்,பவானி த/பெ செல்வகுமார்,ஷாலினி த/பெ ஜெயம்புலிங்கம் ஆகிய நபர்கள் சென்னை எண்ணூர் கடற்கரையில் குளிக்கச் சென்ற போது கடல் அலையில் சிக்கி சடலமாக மீட்கப்பட்டனர்.அவர்களின் உடல்கள் ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்ததை தொடர்ந்து கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் தலைமை செயற்குழு உறுப்பினர் டி.ஜெ..கோவிந்தராஜன் அவர்கள் நேரில் சென்று மருத்துவர்களிடம் விரைவில் பிரேதப் பரிசோதனை செய்யுமாறும் மற்றும் உறவினர்களிடம் நிதி உதவி அளித்து ஆறுதல் கூறினார்.
உடன் திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் பொருளாளர் ரமேஷ் முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ராமஜெயம் பேரூராட்சி துணைத் தலைவர் கேசவன் மற்றும் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.


0 Comments