• Breaking News

    சென்னையில் இருந்து பெங்களூர் சென்ற ஆம்னி பேருந்து தீ விபத்து

     


    சென்னையில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு ஒரு ஆம்னி பஸ் ஒன்று பெங்களூருவுக்கு சென்றுகொண்டிருந்தது. அந்த பஸ்சில் சுமார் 25 பயணிகள் பயணம் செய்தனர்.

    இந்த நிலையில், பஸ் பள்ளிகொண்டா அருகே நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, பஸ்சில் இருந்து புகை வெளிவந்தது. இதனைக்கண்ட பயணிகள் பெரும் அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து பஸ்சிலிருந்து அவசரமாக வெளியேறினர். இதனிடையே பஸ் மளமளவென தீப்பிடித்து எரியத்தொடங்கியது.

    இது குறித்து தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். ஆம்னி பஸ் நெடுஞ்சாலையில் தீ பிடித்து எரிந்த‌ சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விபத்து காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    No comments