• Breaking News

    திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில் மருத்துவமனையில் அனுமதி...... அமைச்சர், எம்எல்ஏ சந்திப்பு



    திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில்  SSA கல்வி நிதியை விடுவிக்க கோரி இன்று நான்காவது நாளாக உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்து வந்த நிலையில் உயர் இரத்த அழுத்தம் காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை பால்வளத் துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினரும் தலைமை செயற்குழு உறுப்பினருமான டி.ஜெ.கோவிந்தராஜன் ஆகியோர் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்து உடல்நலம் குறித்து  விசாரித்தனர்.

    உடன் ஒன்றிய கழக செயலாளர்கள்,மு.மணிபாலன்,நா.செல்வசேகரன்,கா.சு.ஜெகதீசன், கும்மிடிப்பூண்டி பேரூர் செயலாளர் இரா.அறிவழகன் மற்றும் கழக நிர்வாகிகள் மருத்துவர்கள்  உடன் இருந்தனர்.

    No comments