• Breaking News

    ஆசியாவிலேயே மையவாதத்தை பின்பற்றும் ஒரே கட்சி மக்கள் நீதி மய்யம்...... கமல்ஹாசன் பேச்சு


     மக்கள் நீதி மய்யம் சார்பில் தமிழ்நாடு, புதுச்சேரி சட்டசபை தேர்தலுக்கான ஆலோசனை கூட்டம் இன்று முதல் 21 ஆம் தேதி வரை 4 நாட்கள் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் நடைபெறுகிறது. இன்று காலையில் சென்னை மாவட்ட நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து மாலையில் காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகள் முதல் கிளை நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

    நாளை காலை கோவை, மாலை மதுரை, நாளை மறுநாள் காலை நெல்லை, மாலை திருச்சி. 21 ஆம் தேதி காலையில் விழுப்புரம், மாலையில் சேலம் மற்றும் புதுச்சேரி மண்டலங்களைச் சேர்ந்த மாநில நிர்வாகிகள் முதல் கிளை நிர்வாகிகள் வரை அனைவரையும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் எம்.பி. சந்திக்கிறார்.

    மக்கள் நீதி மய்யத்துக்கு மக்களிடம் செல்வாக்கு எப்படி இருக்கிறது? எதிர்வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிட எத்தனை தொகுதிகளில் போட்டியிடலாம் என்பது கட்சி நிர்வாகிகளிடம் கமல்ஹாசன் கருத்துக் கேட்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், கட்சியின் அடிப்படை கட்டமைப்பை மேலும் வலுப்படுத்த என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கலாம்? என கமல்ஹாசன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

    மநீம நிர்வாகிகள் மத்தியில் கமல்ஹாசன் எம்.பி பேசுகையில்,

    வாழும் காமராஜர் நான் இல்லை. என்னுடைய இயற்பெயர் பார்த்தசாரதி. ஜாதிகள் இல்லையடி பாப்பா என்று பாரதி அவருடைய ஆசையைக் கூறினார். ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்பட வேண்டும். அரசியல் சுரண்டலுக்கு நிகரானது அரசியல் வேண்டாம் என்பது. நமது அரசியலில் தேசியமும் இருக்க வேண்டும் தேசமும் இருக்க வேண்டும்.

    எனக்கு பிறகும் நமது கட்சியில் தலைவர்கள் உருவாக வேண்டும். எனக்கு பிறகு கட்சி இல்லை என்று அழிந்து விடக்கூடாது. திமுகவில் நாம் சேர்ந்து விட்டோம் எனக் கூறுகிறார்கள். திமுக நீதிக்கட்சியில் இருந்து வந்தது நம்முடைய கட்சி பெயரிலும் நீதி உள்ளது. இது கூட்டணி கிடையாது அதற்கு மேல் புனிதமானது. ஆசியாவிலேயே மையவாதத்தை பின்பற்றும் ஒரே கட்சி மக்கள் நீதி மய்யம் தான், நாட்டை இடது, வலது என பிரிப்பதை அனுமதிக்க கூடாது எனக்கூறினார்.

    No comments