• Breaking News

    நடிகை ஐஸ்வர்யா ராய் புகைப்படத்தை அனுமதியின்றி பயன்படுத்த கூடாது..... டெல்லி ஐகோர்ட் உத்தரவு

     


    இந்திய திரையுலகில் மிகவும் புகழ்பெற்ற நடிகைகளில் ஒருவராக இருப்பவர் ஐஸ்வர்யா ராய். இவர் டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு ஒன்றை தற்போது தொடர்ந்துள்ளார். அதில், அனுமதியின்றி தனது புகைப்படத்தை யாரும் பயன்படுத்தக்கூடாது என்று கோரியிருந்தார். இந்த வழக்கு இன்று டெல்லி ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பல வலைத்தளங்கள் தனது பெயரைப் பயன்படுத்தி பொருட்களை விற்பனை செய்வதாகவும், ஏஐ-யால் உருவாக்கப்பட்ட அவரது மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்கள் பரப்பப்படுவதாகவும், டி சர்ட், பாத்திரங்கள், ஜாரில் நடிகை ஐஸ்வர்யா ராய் புகைப்படம் பயன்படுத்துவதாகவும்,இதுதொடர்பாக இணையதளங்கள் அதிகளவில் பெருகி இருப்பதாகவும் நடிகை ஐஸ்வர்யா ராய் தரப்பில் வாதிடப்பட்டது.

    இதையடுத்து அத்தகைய அங்கீகாரம் இல்லாத போதிலும், அவரது பெயரைப் பயன்படுத்தி பொருட்களை விற்பனை செய்யும் ஏராளமான வலைத்தளங்களை எடுத்துக்காட்டினார். இதனை பதிவு செய்து கொண்ட டெல்லி ஐகோர்ட்டு, பல்வேறு நோக்கங்களுக்காக நடிகையின் படங்களை அங்கீகரிக்கப்படாமல் பயன்படுத்தும் வலைத்தளங்களுக்கு எதிராக தடை உத்தரவுகளை பிறப்பிப்பதாக உறுதியளித்தார்.

    இந்நிலையில், ஆன்லைன் தளங்கள் வணிக ஆதாயத்திற்காக பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சனின் பெயர், படங்களை சட்டவிரோதமாகப் பயன்படுத்துவதைத் தடை செய்து டெல்லி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. பிரபலமானவர்களின் ஒப்புதல் அவர்களின் பெயர், படங்களை இல்லாமல் பயன்படுத்தப்படும்போது, ​​அது சம்பந்தப்பட்டவருக்கு வணிக ரீதியாக தீங்கு விளைவிப்பது மட்டுமல்லாமல், அவர்களின் கண்ணியத்துடன் வாழும் உரிமையையும் பாதிக்கும் என்று டெல்லி ஐகோர்ட் கூறியுள்ளது.

    ஐஸ்வர்யா ராய் பச்சன், பல நிறுவனங்களின் பிராண்ட் தூதராக பணியாற்றி வருவது குறிப்பிட்டத்தக்கது.

    No comments