மீஞ்சூரில் இலவச ஐஏஎஸ் பயிற்சி மையத்தை பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் திறந்து வைத்தார்
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் பாஜக மாவட்ட பொதுச் செயலாளர் அத்திப்பட்டு அன்பாலயா சிவகுமார் அவர்களின் இலவச ஐஏஎஸ் அகாடமி பயிற்சி நிலையத்தை ரிப்பன் வெட்டி குத்துவிளக்கு ஏற்றி தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் துணை குடியரசுத் தலைவராக சிபி ராதாகிருஷ்ணன் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு பாராட்டுக்களை தெரிவிப்பதாகவும் அதற்காக பிரதமர் மோடி உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு நன்றி தெரிவிப்பதாகவும் இந்திய வரலாற்றிலேயே கூட்டிய வரியை குறைத்த ஒரே பிரதமர் நரேந்திர மோடி மட்டும் தான் என்றும் தமிழ்நாடே அவருக்கு நன்றி தெரிவிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
திறப்பு விழாவில் பங்கேற்ற அவருக்கு மேளதாளங்கள் முழங்க மாலை அணிவித்து மலர்தூவி பூரண கும்பம் மரியாதையுடன் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.இதில் மாநிலத் துணை தலைவர் சக்கரவர்த்தி வெங்கடேசன் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தலைவர் சுந்தரம் முன்னாள் மாவட்ட தலைவர் செந்தில்குமார் மாவட்ட பொது செயலாளர் கே ஜி எம் சுப்பிரமணி பிரேம குமாரி மண்டல் தலைவர் வருண் காந்தி மாவட்ட செயலாளர் கவிதா தெற்கு ஒன்றிய தலைவர் பிரபு மாவட்ட பொருளாளர் சுரேஷ் கோட்டீஸ்வரன் பாலாஜி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
No comments