• Breaking News

    தென்காசியில் மாவட்ட சுகாதார பேரவை கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது



    தென்காசியில் மாவட்ட சுகாதார பேரவை கூட்டம் மாவட்ட ஆட்சியர் கமல்கிஷோர் தலைமையில் நடைபெற்றது.

    தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பொது சுகாதார துறையின் சார்பில் மாவட்ட சுகாதார பேரவை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர்  ஏ.கே.கமல்கிஷோர்,  தலைமை வகித்து பேசியதாவது:- தென்காசி மாவட்டத்தில் இருக்கும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களின் பணிகள், ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தேவைப்படுகின்ற மருத்துவ உபகரணங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்து தீர்மானங்கள் முன் மொழியப்பட்டு நடைமுறைப்படுத்திட வேண்டும் என்றார்.

    இக்கூட்டத்தில், மாவட்ட சுகாதார அலுவலர் மரு.கோவிந்தன், இணை இயக்குநர் (நலப்பணிகள்) மரு.பிரேமலதா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஏ.எடிசன் மற்றும் கூடுதல் ஆரம்ப சுகாதார நிலைய பொறுப்பு அலுவலர்கள், மாவட்ட மருத்துவ அலுவலர்கள், அரசு அலுவலர்கள்  கலந்து கொண்டனர்.

    No comments