கோளூர் அருள்மிகு ஸ்ரீ பொன்னியம்மன் கோவில் கும்பாபிஷேகம்..... ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனர்.....
திருவள்ளூர் மாவட்டம் கோளூரில் அமைந்துள்ள பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ பொன்னியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.யாக கலச பூஜைகளுடன் கலச நீர் மேல தாளங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு கோபுர கலசங்களுக்கும் விநாயகர் பொன்னியம்மன் சாமி சிலைகளுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு பின்னர் பக்த்தர்கள் மீது புனித நீரானது தெளிக்கப்பட்டது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கினர் கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.
No comments