• Breaking News

    சி.எஸ்.கே அணியின் சேர்மனாக என்.சீனிவாசன் நியமனம்

     


    ஐ.பி.எல். கிரிக்கெட்டின் வெற்றிகரமான அணிகளில் ஒன்றான சென்னை சூப்பர் கிங்சை (சி.எஸ்.கே.), சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் லிமிடெட் நிறுவனம் நிர்வகித்து வருகிறது. இந்த நிறுவனத்தின் இயக்குனர்களாக தொழிலதிபரும், இந்திய கிரிக்கெட் வாரிய முன்னாள் தலைவருமான என்.சீனிவாசனும், அவரது மகள் ரூபா குருநாத்தும் நியமிக்கப்பட்டுள்ளனர். வருகிற 27-ந்தேதி நடைபெறும் இதன் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டதும் முறைப்படி பொறுப்பு ஏற்பார்கள். அதன் மூலம் சீனிவாசன் சென்னை சூப்பர் கிங்சின் சேர்மனாக இருப்பார்.

    80 வயதான என்.சீனிவாசன் மீண்டும் விளையாட்டு நிர்வாகத்துக்கு திரும்புவதை வரவேற்றுள்ள சி.எஸ்.கே. தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் கூறுகையில், ‘என்.சீனிவாசனின் வருகை சி.எஸ்.கே. நிர்வாகத்துக்கு பலம் சேர்க்கும். அவரால் அதிகமாக பயணம் செய்ய முடியாது என்பதால் ஆலோசகராக மட்டுமே இருப்பார். அன்றாட பணிகள் குறித்து அவரிடம் ஆலோசனை பெற்று செயல்படுவோம்’ என்றார்.

    No comments