கீழையூர் அருகே நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் தொடக்கம்


திருக்குவளை அடுத்து கிராமத்துமேடு அரசு உயர்நிலைப்பள்ளியில் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை மேல்நிலைப் பள்ளி சார்பில் நாட்டு நல பணித் திட்ட 7 நாட்கள் சிறப்பு முகாம்  நடைபெற்று வருகிறது.

அக்டோபர் 3 ஆம் தேதி வரை 7 நாட்கள் நடைபெறும்  இம்முகாமில் மருத்துவம், கல்வி மற்றும் சமூக நல சேவைகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன.முகாம் துவக்க விழாவில், நாட்டு நல பணித் திட்ட அலுவலர் அ.ஆல்பர்ட் வரவேற்றார்.

சிறப்பு விருந்தினர்களாக பள்ளி நிர்வாக தந்தை  ஐ. ஆரோக்கிய வினிட்டோ, பள்ளி பொறுப்பு தலைமையாசிரியர் எம்.ரெக்ஸ்அலெக்ஸாண்டர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.சிறப்பு விருந்தினராக வேளாங்கண்ணி சிறப்பு நிலை பேரூராட்சி  தலைவர் ஏ.டயானா சர்மிளா பங்கேற்று பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டு வாழ்த்துரை வழங்கினார்.கிராமத்துமேடு முன்னாள் ஊராட்சி தலைவர் ச.முருகானந்தம் தூய்மை பணியை துவங்கி வைத்தார்.

திருக்குவளை நிருபர் த.கண்ணன்

Post a Comment

0 Comments