• Breaking News

    அதிமுக திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சிறுணியம் பலராமன் தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது

     


    திருவள்ளூர் வடக்கு மாவட்ட  கழகம்   சார்பில் அவசர ஆலோசனைக் கூட்டம் வடக்கு மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்றது.   திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும் பொன்னேரி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் சிறுணியம்  பலராமன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வருகின்ற செப்டம்பர் 17ஆம் தேதி பேரறிஞர் அண்ணா அவர்களின்  பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி குறித்தும் மற்றும் கழக  வளர்ச்சி பணி குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.இந்நிகழ்ச்சியில்  சோழவரம் ஒன்றிய துணை செயலாளர் சம்பத் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் என பலர் பங்கேற்றனர்.



    No comments