• Breaking News

    அரசு மருத்துவமனையில் குத்தாட்டம் போட்டு ஓணம் பண்டிகை கொண்டாட்டிய பெண் ஊழியர்கள்

     


    கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை அரசு ஆஸ்பத்திரி வெட்டுமணியில் உள்ளது. இங்கு சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமானோர் சிகிச்சைக்காக வந்து செல்கிறார்கள். இந்த ஆஸ்பத்திரியில் அதிக சத்தத்தை எழுப்பக்கூடிய ஒலிபெருக்கி வைத்து பெண் ஊழியர்கள் குத்தாட்டம் ஆடியுள்ளனர்.


    இதுதொடர்பான வீடியோ தற்போது சமூகவலைத்தளத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஓணம் பண்டிகையை ஆஸ்பத்திரியில் ஆட்டம், பாட்டத்துடன் கொண்டாடியுள்ளனர். பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவு மற்றும் அறுவை சிகிச்சை பிரிவு செயல்படும் கட்டிடப் பகுதியில் இந்த கொண்டாட்டம் நடந்துள்ளது.

    இதற்கு சமூகவலைத்தளத்தில் கண்டன குரல்கள் எழுந்துள்ளன. அதிக சத்தத்தை எழுப்பும் ஒலிபெருக்கிகள் வைத்து கொண்டாடியது நோயாளிகளுக்கு இடைஞ்சலாக இருக்கும். இது கூட ஆஸ்பத்திரி ஊழியர்களுக்கு தெரியாதா?. நோயாளிகளை பாதிக்காத வகையில் வேறொரு இடத்தில் நிகழ்ச்சியை நடத்தியிருக்கலாமே? என கருத்துகளை சமூகவலைத்தள வாசிகள் தெரிவித்துள்ளனர்.

    No comments