நாகை: வலிவலத்தில் சேதமடைந்த சிமெண்ட் சாலையை சீரமைக்க கோரிக்கை
நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் ஒன்றியம் வலிவலம் ஊராட்சிக்கு உட்பட்ட கீழத்தெரு பகுதியிலிருந்து பண்டாரவாடை செல்லும் இணைப்பு சிமெண்ட் சாலை பல ஆண்டுகளாக சேதமடைந்து காட்சியளித்து வருகிறது.இப்பகுதியில் சுமார் 60-க்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர் குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். சுமார் அரை கிலோமீட்டர் நீளமுடைய இந்த சாலை சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது சாலை முழுவதுமாக சேதமடைந்து ஆங்காங்கே குண்டும் குழியுமாக காட்சியளிப்பதால் அவ்வழியே, செல்லும் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் தினசரி கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்கள் மற்றும் வயதான முதியோர்கள் நடந்து கூட செல்ல முடியாத நிலை இருப்பதோடு அவசர காலத்தில் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் வந்து செல்ல முடியாத நிலை உள்ளது.ஆகவே இந்த சாலையை சீரமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கீழ்வேளூர் நிருபர் த.கண்ணன்
No comments