மத்திய மண்டலத்தில் சிறந்த ஒன்றிய செயலாளராக தேர்வு செய்யப்பட்ட கீழையூர் ஒன்றிய செயலாளருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் விருது வழங்கி பாராட்டு
நாகப்பட்டினம்,: மத்திய மண்டலத்தில் சிறந்த ஒன்றிய செயலாளராக தேர்வு செய்யப்பட்ட கீழையூர் ஒன்றிய செயலாளர் ஏ.தாமஸ்ஆல்வா எடிசனுக்கு கரூரில் நடந்த திமுக முப்பெரும் விழாவில் முதல்வர் விருது வழங்கி பாராட்டினார்.
திமுக முப்பெரும் விழா கரூரில் நேற்று முன் தினம்(17ம் தேதி) நடந்தது.இந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட் டுதலின் படி தமிழகத்தில் சிறப்பாக செயல்பட்ட ஒன்றியம், நகரம்.. பேரூராட்சி செயலாளர்கள் 16 பேருக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது. அந்தவகையில் நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஒன்றியத்தில் திமுக செயலாளராக பணியாற்றி வரும் ஏ.தாமஸ் ஆல்வா எடிசனுக்கு திமுக தலைவரும், முதல்வருமான கீழ் ஒவ்வொரு ஆண்டும் ஆய்வுக் கூட் டம், கட்சியின் அனைத்து செயல்பாடுகள், உறுப்பினர் சேர்க்கை முயற்சிகள், பொதுமக்கள் பிரச்சனைகளை முன்வைத்து தீர்வு காணும் செயல்பாடுகள் ஆகியவற்றின் அடிப்படை யில் மத்திய மண்டலத்தின் சிறந்த ஒன்றிய செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இவ்வாறு தேர்வு செய்யப்பட்ட தாமஸ் ஆல்வாஎடிசனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய மண்டலத்தில் சிறந்த ஒன் றிய செயலாளர் விருதை வழங்கி பாராட்டினார். விருது பெற்றதன் மூலம் கீழையூர் ஒன்றியத்திற்கு அவர் பெருமை சேர்த்துள் ளார். விருது பெற்ற ஒன்றிய செயலாளர் தாமஸ் ஆல் வா எடிசனுக்கு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். மேலும் அவர் தொடர்ந்து கட்சிக்கும். பொதுமக்களுக்கும் பணி யாற்றுவார் என தொண்டர்கள் தெரிவித்துள்ளனர்.
நாகை செய்தியாளர் ஜி.சக்கரவர்த்தி
No comments